Thứ Ba, 16 tháng 11, 2010

அதி உயர் தகவல் களஞ்சியம்

எனக்கு பிடித்தவை....! 
  


             http://www.marikumar.co.cc/
















இலவச மென்பொருட்கள்

1. இயர் பான் வியூ (Irfanview): இதனை http://www.irfanview.com/என்ற இணையதளத்தில் பெறலாம். கிராபிக்ஸ் வியுவர் புரோகிராம். ஒரே கிளிக்கில் உங்கள் இமேஜ் பைல் மற்றும் பலவகையான டிஜிட்டல் வீடியோக்களைப் பார்க்க இது உதவும். இதனைப் பயன்படுத்தி பைல்களை வேறு பார்மட்டிற்கு மாற்றலாம். சிறிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். குறிப்புகளை எழுதலாம்.

2. ட்வீக் யு.ஐ (Tweak UI): :www.microsoft.com/windowsxp/downloads/powertoys/xppowertoys.mspxஎன்ற மைக்ரோசாப்ட் நிறுவன முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். இதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகமாக பரிந்துரைக்காத போதும் இதனைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். பல பயன்பாடுகளுக்கு இது ஏற்றதாக உள்ளதால் இது இல்லை என்றால் சிலருக்குக் கம்ப்யூட்டர் இயக்குவது கடினமாகும். இதனை இறக்கிப் பதிந்து பின் இதன் பயன்பாடுகளின் பட்டியலைக் காணலாம்.

3.டபுள்கில்லர் (DoubleKiller) : கிடைக்கும் இணைய தள முகவரி:http://www.bigbangenterprises.%20de/en/doublekiller இதன் மேம்படுத்தப்பட்ட புரோகிராமை பணம் கட்டியும் வாங்கலாம். உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பைலைப் பல இடங்களில் வைத்திருப்பீர்கள். குறிப்பாக சினிமா பாடல்களைப் பதிந்து வைத்துவிட்டு அவற்றை அவரவருக்கு குரூப் குரூப்பாக மீண்டும் இரண்டு முறையோ அல்லது பல முறையோ தனித்தனி போல்டர்களில் பதிந்து ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைக் காலி செய்திருப்பீர்கள். இத்தகைய டூப்ளிகேட் பைல்களை இனம் கண்டு உங்கள் அனுமதியுடன் இந்த புரோகிராம் அழித்துவிடும்.

4. எக்ஸ்புளோரர் எக்ஸ்பி (ExplorerXP) : http://www.explorerxp.com/என்ற முகவரியில் கிடைக்கிறது. எக்ஸ்பி சிஸ்டத்தில்தான் இது இயங்கும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு மாற்றானது. இதனுடைய டேப்கள் தனி வகையானவை. இந்த சிறிய புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் மற்றும் போல்டர்களை அதன் அளவு மற்றும் பிற பண்புகளுடன் காட்டுகிறது.

5. பிரீ கமாண்டர் (FreeCommander): http://www.freecommander.com/இணையதளத்தில் இதனைப் பெறலாம். இந்த சிறிய புரோகிராமினை உங்கள் யு.எஸ்.பி. டிரைவில் கூட எடுத்துச் செல்லலாம். எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தி அதில் உள்ள பைல்களைக் கையாளலாம்.

6. க்யூ டி டேப் பார் (QTTabBar): qttabbar.wikidot.com தளத்தில் கிடைக்கும் இந்த புரோகிராம் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் சில கூடுதல் பயன்பாடுகளைத் தருகிறது. டேப்கள் வழியே பைல்களைக் கையாளும் வசதியைத் தருகிறது. இந்த பயன்பாட்டுப் பைலை இறக்கி இன்ஸ்டால் செய்த பின்னர் எக்ஸ்புளோரர் சென்று டூல் பாரில் கிளிக் செய்து அதில் என்பதில் செக் செய்திடவும். அதில் உள்ள பட்டன் பார் உங்களுக்குக் கூடுதல் வசதிகள் தருவதனைக் காணலாம்.

7. டாஸ்க்பார் ஷபிள் 2.2 (Taskbar Shuffle 2.2) :www.freeweb.com/nerdcave/taskbarshuffle.htm என்ற தள முகவரியில் உள்ள இணையப் பக்கத்தில் இது கிடைக்கிறது. டாஸ்க் பாரில் நீங்கள் பயன்படுத்தும் பல புரோகிராம்கள் வரிசையாக இடம் பெற்றிருக்கும். ஓரிரு புரோகிராம்களை மட்டும் நீங்கள் அடுத்தடுத்து பயன்படுத்த விரும்புவீர்கள். ஆனால் ஒவ்வொன்றும் ஒரு கோடியில் இருக்கலாம். அடுத்தடுத்து இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். எனவே டாஸ்க் பார் உங்களைக் கட்டுப்படுத்தாமல் நீங்கள் அதனைக் கட்டுப்படுத்த விரும்புகிறீர்கள். அப்படியானால் உங்களுக்கு இந்த புரோகிராம் அவசியம் தேவை. நீங்கள் விரும்பும் வகையில் இயங்கும் புரோகிராம்களின் பட்டன்களை அமைத்துக் கொள்ள உதவுகிறது. சில டாகுமெண்ட்களை இணைத்து ஒரே பட்டனில் அமைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால் விண்டோஸ் 95 தொகுப்பு முதல் அனைத்திலும் இது இயங்குகிறது.

8. பிடாஸ்சியோ (Pitaschio) : pitaschio.ara3.net முகவரியில் கிடைக்கும் இந்த புரோகிராம் உங்கள் ஒர்க்கிங் ஸ்டைலுக்கேற்ற வகையில் விண்டோஸைத் தருகிறது. இது விண்டோவை உங்கள் ட்ரேக்கு சுருக்குகிறது. அப்படியே இழுத்துச் செல்ல உதவுகிறது. சில குறிப்பிட்ட கீகளின் பயன்பாட்டை அந்த செயலிலிருந்து விலக்குகிறது. எடுத்துக்காட்டாக விண்டோஸ் கீயை செயல் இழக்கச் செய்கிறது. இதனால் தேவையில்லாமல் அதனை அழுத்தி ஸ்டார்ட் பட்டனை அழுத்திய நிலை ஏற்படாது அல்லவா? உங்கள் கீ போர்டை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்ற புள்ளி விபரத்தினைத் தருகிறது.

9. ரீசைஸ் எனேபில் (ResizeEnable) : கிடைக்கும் இணைய தள முகவரி: www.digitallis.co.uk/pc/downloads.html இயக்குவதற்கு எளிதானது. விண்டோவில் எழும்பி வரும் பாப் அப் விண்டோவின் அளவைக் குறைக்க நீட்ட இது உதவுகிறது. தேவை என்றால் நீட்டிக் கொள்ளலாம். இல்லை என்றால் குறைத்துக் கொள்ளலாம்.

10. ட்ரூ கிரிப்ட் (TrueCrypt) : பைல்களின் அளவைச் சுருக்கி விரித்துத்தான் பல புரோகிராம்கள் இயங்குகின்றன. அதே போல நீங்களும் உங்கள் பைல், போல்டர் ஏன் மொத்த டிரைவினையும் சுருக்கி வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? http://www.truecrypt.org/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று இந்த புரோகிராமினை இறக்கிப் பதிந்து கொள்ளுங்கள். இதனைப் பயன்படுத்தி பிளாஷ் டிரைவில் உள்ள பைல்களையும் போல்டர்களையும் கூட சுருக்கி வைத்துக் கொள்ளலாம்.

11. டிபிராக்ளர் (Defraggler) : சிதறிய வகையில் ஹார்ட் டிஸ்க்கில் பதியப்பட்டிருக்கும் பைல்களைக் கூடுமானவரை ஒரே இடத்தில் பதிந்து வைக்கும் பணியே டிபிராக் எனப்படுவதாகும். துண்டு துண்டாக ஹார்ட் டிஸ்க்கில் இடம் பெற்றிருக்கும் பைல்களை ஒரே இடத்தில் பதிய வைப்பதால் கம்ப்யூட்டரின் சிபியூ அவற்றைத்தேடிப் படிக்கும் நேரம் குறைகிறது. இந்த வேலையை விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள டிபிராக் பைல் யுடிலிட்டி மேற்கொள்கிறது. டிபிராக்ளர் தொகுப்பும் இந்த வேலையை மேற்கொள்கிறது. ஆனால் இதனைப் பயன்படுத்தி தனி ஒரு பைலையும் நாம் டிபிராக் செய்திட முடியும். அல்லது தொடர்புடைய பைல்களின் தொகுப்பினையும் மொத்தமாகத் தேர்ந்தெடுத்து டிபிராக் செய்திட முடியும். இந்த ஒரு பைலை பிளாஷ் டிரைவில் வைத்துக் கூட இயக்கலாம். இந்த பைல் கிடைக்கும் இணைய தளத்தின் முகவரி: http://www.defraggler.com/.

12. சிஸ்டம் ரெஸ்க்யூ சிடி: இந்த புரோகிராம் தரும் சிடி லினக்ஸ் சிஸ்டத்தை உங்கள் கம்ப்யூட்டருக்குப் பூட் செய்து தரும். ஒரு சிடியை லினக்ஸ் சிஸ்டம் தரக்கூடிய பூட்டபிள் டிஸ்க்காக மாற்றிக் கொண்டால் விண்டோஸ் சிஸ்டத்திற்கு என்ன பயன்? என்ற கேள்வி எழுகிறதா? உங்கள் விண்டோஸ் சிஸ்டம் கிராஷ் ஆகி கம்ப்யூட்டர் முன் நீங்கள் விழித்துக் கொண்டு கைகளைப் பிசைந்து கொண்டு இருக்கையில் இதனுடைய அருமை தெரியும். இதனை வைத்து பூட் செய்தால் கிடைக்கும் சிஸ்டம் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டிரைவ்களுக்கும் வழி காட்டுகிறது. நெட்வொர்க் டிரைவ்களுக்கும் இது வழி நடத்தும். எனவே உங்களுக்குப் பிரியமான கம்ப்யூட்டர் சரியான நேரத்தில் காலை வாரிவிடுகையில் இந்த புரோகிராம் சிடி உங்களுக்குக் கை கொடுத்து தூக்கிவிடும். இந்த புரோகிராம் கிடைக்கும் இணைய தளத்தின் முகவரி: http://www.sysresccd.org/





Thanks2 -http://www.marikumar.co.cc/                       

Không có nhận xét nào:

Đăng nhận xét