Chủ Nhật, 3 tháng 10, 2010

எந்திரன் -இந்திய திரை உலகம் அதிர்ச்சி.. .!



என்வழி காம்.இது ரஜினி ரசிகர்களின் இந்திரபுரி என்றால் மிகை இல்லை.ஒவ்வொரு முறையும் தலைவர் படம் ரிலீஸ் ஆகும் போதும் அதன் அப்டேட் செய்திகளை வெளியிடுவதில் இந்த இணையதளத்துக்கு நிகர் யாருமில்லை.வேறு எந்த நடிகருக்கும் இது போன்ற அப்டேட் தகவல்களை சொல்ல இணையதளமும் இல்லை.அப்படி இருந்தால் வினோ போல துடிப்பான ரசிகர் மற்றும் வசியமான எழுத்தாளரும் இல்லை.அந்த இணையதளத்திலிருந்து எனக்கு பிடித்த எந்திரன் அப்டேட் தகவல்கள்;
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தை நோக்கி முன்னேறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் / ரோபோ திரைப்படம் என்ற தகவல் வெளி்யாகியுள்ளது.
படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவு அமெரிக்கா மற்றும் கனடாவின் பல இடங்களில் கட்டண சிறப்புக் காட்சி நடைபெற்றது. ஹாலிவுட் படங்களுக்குத்தான் இதுபோன்ற காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த சிறப்புக் காட்சிகளில் வசூலான தொகை, மற்ற சாதாரண தமிழ்ப் படங்களின் ஓவர்சீஸ் வசூலுக்கு நிகராக இருந்ததாக அமெரிக்க விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
படம் வெளியான முதல் தினம் எந்திரன் இரண்டாம் இடத்திலும், ஹாலிவுட் படமான சோஷியல் நெட்வொர்க் முதலிடத்திலும் இருந்தது. அப்போதே, எந்திரன் முதலிடத்துக்கு வந்துவிடும் என கணிப்பு வெளியிட்டிருந்தனர் Rentrak (audience measurement company in USA) எனும் நிறுவனத்தினர். பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தை கணித்து வெளியிடும் அமெரிக்க நிறுவனம் இது. அதன்படி அக்டோபர் இரண்டாம் தேதி நிலவரப்படி ரோபோ / எந்திரன் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல் வெளியிடப்படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
பெரிய ஹாலிவுட் படங்களின் வெளியீடு இல்லாத சூழல் என்றாலும், அமெரிக்க டாப் 10-ல் இந்தியப் படங்களுக்கும் ஒரு இடம் கிடைப்பதே பெரிய விஷயம். ஆனால் ரஜினியின் படமோ முதல் இரு இடங்களில் வைத்துப் பேசப்படுகிறது.
மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படும் பிரிட்டிஷ் டாப் 10 -ல் எந்திரனுக்கு எந்த இடம் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. முதல் மூன்று இடங்களுக்குள் எந்திரன் இடம்பெறும் என்று லண்டன் நகர விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் சிவாஜி – தி பாஸ் பிரிட்டிஷ் டாப் 10-ல் 9 இடம் பெற்றது நினைவிருக்கலாம். இந்தப் பட்டியலில் இடம் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையும் சிவாஜிக்கே கிடைத்தது

ந்திரன் மெகா ஹிட் என அறிவிக்கப்பட்டதும், ட்விட்டரில் வந்த ஒரு கமெண்ட் இது. சனிக்கிழமை காலையிலிருந்தே இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.


எந்திரன் வெளியாகும் நேரத்தில் அதனோடு மோதி மண்டை உடைத்துக் கொள்ள விரும்பாததால், தமிழ், தெலுங்கு திரையுலகில் எந்தப் படமும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்தியில் மட்டும் ரன்பீர் கபூர் நடித்த அஞ்ஜானா அஞ்ஜானி வெளியாகிவிட்டது. இது ஒரு காதல் படம். ஒரிஜினல் இந்திப் படம் என்றாலும், வட இந்திய மீடியாக்கள் ரஜினியின் ரோபோ / எந்திரனுக்கே அதிக முக்கியத்துவம் தந்து வருகின்றன.
வசூலிலும் தரத்திலும் ரோபோவுக்கு அருகில் கூட இந்தப் படம் வராது என்பதைக் குறிப்பிடுவதற்காக, “எந்திரன் கார் பார்க்கிங் வசூலையாவது தொடுமா அஞ்சானா அஞ்ஜானி” என்று கிண்டலாகக் கேட்டு ஒரு கமெண்டை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஒரு குறும்புக்கார ரசிகர்.
அஞ்ஜானா அஞ்ஜானியை மட்டும் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்… மற்ற படங்களுக்கும் இது பொருந்தும்தானே!

ரியலூர் எத்தனை சின்ன நகரம் என்று தெரியும்… ஆனால் எந்திரன் விஷயத்தில் அங்கு நடந்த ஒரு சம்பவம், அடுத்து வரும் ரஜினி படத்தின் முதல்நாள் முதல் காட்சியின்போது தவறாமல் நடக்கும் சம்பவமாகப் போகிறது!
இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக (தலைவர் தொடர்பான செய்திகளில் இனி அடிக்கடி இந்த வாக்கியத்தைப் பிரயோகப்படுத்த வேண்டி வரும்… வேறு வழியில்லை!) எந்திரன் படத்தின் டிக்கெட்டை ஏலம் விட்டு காட்சியைத் தொடங்கினர் அரியலூரில்.
அரியலூரில் எந்திரன் வெளியாகியுள்ள ஒரு திரையரங்கின் உரிமையாளரான கார்த்திக், ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைத்திருக்கிறார்.உடனே, தனது திரையரங்கில் வெளியான ரஜினியின் எந்திரன் முதல் காட்சியின் முதலாவது டிக்கெட்டை ஏலம் விட்டிருக்கிறார். அதிகபட்சமாக ரூ 3000-க்கு அந்த டிக்கெட்டை ஏலம் எடுத்துள்ளார் ரசிகர் ஒருவர்.
‘ஹாலிவுட்டில் கூட இப்படியெல்லாம் நடந்தது கிடையாது. ரஜினி என்ற அரிய கலைஞர் மீது மக்கள் கொண்டுள்ள அபிமானம் இது. அவரது படங்கள் மட்டுமே நிகழ்த்தும் அதிசயம் இது’, என குறிப்பிட்டுள்ளனர், விஷயத்தை அறிந்த பத்திரிகையாளர்கள்.

ஜினிக்கு அஜீத் மீது அதீத அன்பு. அதன் விளைவு அஜீத் ரசிகர்களுக்கும் ரஜினிதான் அன்புக்குரிய தலைவர். அந்த அபிமானத்தின் விளைவஎந்திரன் வெளியீட்டையொட்டி ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், ஆரத்தி காட்டியும் தங்கள் அன்பினை வெளிப்படுத்தியுள்ளனர் அஜீத் ரசிகர்கள்.
திண்டுக்கலில் ரஜினியின் பிரமாண்ட பேனருக்கு பாலாபிஷேகம் செய்து அஜீத் ரசிகர்கள் கொண்டாடினர்.
வத்தலக்குண்டு பரிமளம் தியேட்டரில் எந்திரன் படம் திரையிடப்பட்டது. படத்தை பார்ப்பதற்காக ரஜினி ரசிகர்கள் இன்று அதிகாலையிலிருந்து தியேட்டர் முன் குழுமியிருந்தனர்.
அப்போது, வத்தலக்குண்டு ஆழ்வார் அஜீத் ரசிகர் மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் மகா தலைமையில் தியேட்டர் முன் எந்திரன் படம் வெற்றிபெற வாழ்த்தி மிகப்பெரிய பேனர் வைத்திருந்தனர். அந்த பேனரில் இருந்த ரஜினி படத்துக்கு அஜீத் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும் கற்பூர ஆரத்தி எடுத்தும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ‘தம்பிகளை’ கைகுலுக்கியும் கட்டிப் பிடித்தும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர் ரஜினி ரசிகர்கள். சென்னையிலும் சில இடங்களில் எந்திரனை வாழ்த்தி அஜீத் ரசிகர்கள் அடித்திருந்த போஸ்டர்கள் பளிச்சிட்டன.
இன்று டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் தொடங்க உள்ளன. போட்டிக்காக வருகை தந்திருக்கும் வீரர், வீராங்கனைகள்,அதிகாரிகளை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு சினிமா தியேட்டரை ரெடி செய்துள்ளனர் விளையாட்டு கிராமத்தில். இதில் ரோபோ (எந்திரனின் இந்திப் பதிப்பு) உள்ளிட்ட படங்களைப் போட்டுக் காட்டப் போகிறார்களாம்.
இந்த விவரத்தை டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் தவிர ‘அஞ்சானா அஞ்சானி’ உள்ளிட்ட சில படங்களையும் திரையிடவிருக்கிறார்களாம்.

லைவர் படத்தைத் தனியா பார்க்கிறதாவது… முதல் நாள் முதல் ஷோ, அதுவும் சக ரசிகர்களுடன் பார்த்தால்தான் எனக்கெல்லாம் திருப்தியா இருக்கும்..,” என்றார் காசி திரையரங்கில் படம் பார்க்க வந்த சிம்பு.
அவர் வந்தது அதிகாலை 5 மணிக் காட்சிக்கு!
அவருடன் பிரேம்ஜி போன்ற நடிகர்களும் வந்திருந்தனர். மீடியாக்கார்கள் சூழந்து கொண்டதும் இப்படிச் சொன்னார் சிம்பு:
“எந்திரன் படத்தை ரசிகர்களுடன் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்க்கும் அனுபவத்தை மிஸ் பண்ணக் கூடாது என்றுதான் கனடா ஷூட்டிங்குக்குக் கூடப் போகாமல் சென்னையிலேயே இருந்தேன். தலைவர் படம் சம்திங் ஸ்பெஷல் எப்பவுமே” என்றார்.
தியேட்டருக்குள் படம் பார்க்க நுழைந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்ததும் விசிலடித்து கைதட்ட, உடனிருந்தவர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். “இது சூப்பர்ப் படம். சான்ஸே இல்ல… தலைவர் ராக்ஸ். சிட்டி ரஜினியின் வில்லத்தனத்தை வெகுவாக ரசித்தேன்” என்றார் படம் முடிந்து வெளியில் வந்த சிம்பு.
நன்றி-வினோ 
.என்வழி.காம் 




6 nhận xét:

  1. தலைவர் பட்டைய கிளப்புறாரு

    Trả lờiXóa
  2. ஆன் லைன்ல 35 பேர் இருக்காங்க..பிரபல பதிவராயிட்டீங்க முத்துவேல்!

    Trả lờiXóa
  3. இப்போ ரொம்ப சூப்பரா இருக்கு

    Trả lờiXóa
  4. விளக்கமான விபரங்கள்!

    Trả lờiXóa
  5. ஐயோ , எவ்ளோ பெரிய பதிவு .. சரி சரி .. படிச்சிட்டு வரேன் ..!!

    Trả lờiXóa